Monday, 5 September 2011

'' சமூக நல்லிணக்கத்தின் சங்கமம்'' சிங்கப்பூர்



'பச்சை ரோஜா' இதழ்  'புதிய நிலாஇதழ் ஆசிரியர் மு.ஜாஹாங்கீர் அவர்களுடன்  நேர்காணல்.
'' சமூக நல்லிணக்கத்தின் சங்கமம்'' சிங்கப்பூர்
'வாழ்கிகன்ற நாட்டிற்கு வளம் சேர்ப்போம்;: சமூக ஒற்றுமைக்கு பலம் சேர்ப்போம்;;  மனித நேயம் காப்போம்; மத நல்லிணக்கம் வளர்ப்போம்'- என்ற முழக்கத்தோடு இறையருளால் கடந்த கால் நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் சமூக அரசியல் பொதுவாழ்வில் ஆர்பாட்டமின்றி அமைதியாக ஆக்கபூர்வமாக தொண்டாற்றி வருபவர், திரு மு.ஜஹாங்கீர்.
'சிங்கப்பூர் நாணயமாற்று வணிக தலைவர், 'சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், 'புதிய நிலா' திங்களிதழின் நிறுவனர். இப்படி பல்வேறு பொறுப்புகளையும் வகித்து திறம்பட செயலாற்றி வரும் இவர்.
இணைய தளத்தின் ‘Face Book’ எனப்படும் முகநூல்- வட்டத்தின் மூலமாக உலகில் பலமுகங்களிலும் வாழும் நூற்றுக்கணக்கான இளைஞர்களோடு தினமும் கலந்துரையாடி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் தன்முனைப்பு பயிற்சியளித்து வருகிறார் என்பது  மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.
எதிர்வரும் ஆகஸ்ட் திங்கள் 9-ஆம் நாளில் தனது 46 வது தேசிய தின நாளை கொண்டாடி மகிழவிருக்கும் சிங்கப்பூர் மக்களுக்கு நம் நல் வாழ்த்துக்களை பதிவு செய்வதோடு அதையொட்டி திரு.மு.ஜஹாங்கீரின் நேர்காணலையும் வெளியிட்டு மகிழ்கிறது 'பச்சைரோஜா'.

No comments:

Post a Comment